Ad 728x90

Wednesday 26 November 2014

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல்,டீசல்  விலை லிட்டருக்கு ரூ.2  குறைக்கப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
 சர்வதேச சந்தையில் நான்கு  ஆண்டுகளின் இல்லாத அளவில்  கச்சா எண்ணெயின்  விலை அதிகமாக குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பெட்ரோல் விலை 30-ம் தேதி முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறையும் என்று டெல்லி தகவள் வட்டாரங்கள்  கூறபடுகின்ற்றனர்.. கடந்த 31-ம் தேதி பெட்ரோல் விலை 2.41 காசுகளும், டீசல் விலை 2.25 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத. இதன் விளைவாக பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் வருத்தமடைவதாக தெரியவருகிறது.  

Wednesday 5 November 2014

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை  பிடித்தார்

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை பிடித்தார்

 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த வருடம் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு முறையின்  கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நமது இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். இதே போல  இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர். என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.
12  பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

12 பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

சென்னையில் கத்தி படம்  வெளியாக  கூடாது என திரையரங்குகளை தாக்கியதில் கைது செய்த 12 பேருக்கு   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையில்   ஜாமின் வழங்கியது.
தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280  குறைந்துள்ளது . ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 2422/-    சவரன் ரூ 19376/-  விற்க்கபடுகிறது  . சர்வதேச சந்தையில் தங்கத்தின்  விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கருதபடுகிறது . கடந்த அக்டோபர்31-ம் தேதி தங்கத்தின் விலை 20,000 ரூபாய்க்கு கீழே செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி 19,760-ஆகவும், நவம்பர் 2-ம் தேதி இந்த விலையில் 88 ரூபாயும், நவம்பர் 4-ம் தேதி 16 ரூபாயும் குறைந்து இருந்தது.

   இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.80  பைசவாகும், ஒரு கிலோ ரூ 34360/- ரூபாயாக விற்க்கபடுகிறது.  இதானால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம்  கொலை மிரட்டல்

பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல்

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அறுபதுக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர்.    

  இத்தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத குழுவிலிருந்து பிரிந்த தெஹ்ரிக் ஏ தாலிபான் பாகிஸ்தான்  ஜமாத் உல் அஹ்ரர் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பெற்றள்ளது.  வாகா தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்த தீவிரவாத குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக கருதப்படும் இசானுல்லா இசான் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். 

  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த  காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Tuesday 4 November 2014

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

இந்தியாவின் பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் கால அவகாசம் அகாலம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
   இந்தியா முதளிட்டார்களின் பார்வைக்கு தென்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார் . 
அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அந்தமான் அருகே அஷோபா என  புதிய புயல் உருவாகி உள்ளது.

  அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து, ஆந்திரா, தமிழகத்தை அடுத்த மூன்று நாட்களில் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம்அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அஷோபா புயல், வரும் 8 அல்லது 9ம் தேதிகளில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 
    கடந்த மாதம் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு, ஹுட்ஹுட் என பெயரிடப்பட்டது. இந்த புயல், விசாகப்பட்டனம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால், ஆந்திர கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது... இந்த முறை இலங்கை பெயர் சூட்டி உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'தற்போது, விசாகப்பட்டனத்தில் இருந்து 1400 கி.மீ., தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும். அடுத்த மூன்று தினங்களில் அது கரையை கடக்கும். புயல் தொலைவில் நிலை கொண்டிருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை தற்போது கூற முடியாது. புயல் நெருங்கியவுடன் அது குறித்த தகவல் வௌியிடப்படும்.
 வங்க கடலில் அந்தமான் அருகேயும், இலங்கை அருகேயும் புயல் சின்னங்கள் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'இலங்கை அருகே காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக தெரிவிகின்றனர்.